உலகம் முழுவதும் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக கருதப்படுவது ட்விட்டர் செயலியாகும். தற்பொழுது இந்த ட்விட்டர் நிறுவனத்தை உலகின் மிக பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் 3.61 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
Twitter users now have to pay Rs.1600 monthly fee Elon Musk New Announcement
இந்நிலையில், ட்விட்டரில் அளிக்கப்படும் சில சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க உள்ளதாகவும் அதுமட்டுமல்லாமல் டுவிட்டர் தளத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் செயலியில் உள்ள அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான ‘ப்ளூ டிக்‘ வசதிக்களுக்கு இனி மாதந்தோறும் 1,600 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், எலான் மஸ்க் வெளியீட்டுள்ள பதிவில் ட்விட்டர் தளத்தில் வெளியிடப்படும் பதிவுகளின் நம்பகத்தன்மை, உண்மைதன்மை, தரத்தை மதிப்பீடு செய்வதற்கு புதிதாக பதிவுகள் மதிப்பீட்டு குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கிற்கான ‘ப்ளூ டிக்‘ வசதி பிரபலாமானவர்களுக்கு வழங்கப்படுகிறது. இனி ப்ளூ டிக் வசதியை பெற கட்டணம் வசூலிக்க போவதாகவும் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துதல் உள்ளிட்ட வணிக ரீதியான பயன்பாடுகளுக்கும் டுவிட்டரில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி அதற்கும் கட்டணம் வசூலிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
RECENT POSTS
- தனியார் நிறுவனத்தில வேலை செய்ய சூப்பர் ஜான்ஸ்! தமிழகத்தில் நீங்க எங்க வேண்டுமானாலும் வேலை செய்யலாம்!
- பிரைவேட் கம்பெனியில வேலை தேடுறீங்களா? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
- ரூபாய் 40,000 – 50,000 சம்பளத்தில் அண்ணா பல்கலையில் அசத்தலான வேலைவாய்ப்பு @ www.annauniv.edu
- IIT மெட்ராஸில் புதிய வேலைகள் அறிவிப்பு! மாதம் ரூ.35000 முதல் ரூ.45000 வரை சம்பளம் வழங்கப்படும்!
- வேளாண் பட்ஜெட் திட்டங்கள் : நடிகர் கார்த்தி வெளியிட்ட டுவீட்