டுவிட்டரின் புதிய சி.இ.ஓ. யாருன்னு தெரியுமா? ஆள பாத்தா அசந்துடுவீங்க..

Twitters new CEO Do you know who Dont be surprised-Twitter New CEO

உலகில் கோடிகணக்கான மக்கள், தனியார் நிறுவனங்கள் பிரபல நடிகர்கள் மற்றும் அரசியல் வாதிகள் என அனைவரும் சமூக ஊடகங்களில் மிக பிரபலமான ட்விட்டர் நிறுவனத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த ட்விட்டர் நிறுவனத்தை உலகின் மிக பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமீபத்தில் கையகப்படுத்தினார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்துக்கு உரிமையாளரானதை தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் ‘புளூ டிக்’ பயன்படுத்துகின்றனர். இந்த புளூ டிக் டுவிட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ளும். ட்விட்டர் செயலியில் உள்ள அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான ‘ப்ளூ டிக்’ வசதிக்களுக்கு இனி மாதந்தோறும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்தின் உறுமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முன்னதாக டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரிகளை பணி நீக்கம் செய்ததை அடுத்து தற்பொழுது, டுவிட்டரின் இயக்குநர் குழுவையும் பணி நீக்கம் செய்துள்ளார். டுவிட்டரின் இயக்குநர் குழுவில் 9 பேர் பணியாற்றினார், இந்நிலையில் எலான் மஸ்க் இந்த 9 பேரையும் ஒரே நேரத்தில் பணி நீக்கம் செய்தார்.

இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ. பதவி காலியாக உள்ள நிலையில், இந்த பணியிடத்தை நிரப்புவதற்கான வேலையில் எலான் மஸ்க் ஈடுபட்டார். தற்பொழுது அதற்கான தேடலில் வெற்றியையும் பெற்று விட்டார். டுவிட்டர் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ. வாக எலான் மஸ்க்கின் செல்லபிராணியான பிளாக்கி என்ற வளர்ப்பு நாயை பணியில் அமர்த்தியுள்ளார். மற்ற சி.இ.ஓ.க்களை விட சிறந்த சி.இ.ஓ.வாக தனது பிளாக்கி இருக்கும் என மஸ்க் உணருகிறார். இதனை எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here