மீண்டும் மாற்றப்பட்ட டுவிட்டரின் லோகோ… என்னென்னு தெரியுமா..?

Twitters redesigned logo do you know what

பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் பிரபல நடிகர்கள் மற்றும் அரசியல் வாதிகள் என அனைவரும் சமூக ஊடகங்களில் மிக பிரபலமான ட்விட்டர் நிறுவனத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த ட்விட்டர் நிறுவனத்தை உலகின் மிக பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமீபத்தில் கையகப்படுத்தினார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்துக்கு உரிமையாளரானதை தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில், ட்விட்டர் செயலியில் உள்ள அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான ‘ப்ளூ டிக்’ வசதிக்களுக்கு இனி மாதந்தோறும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்தின் உறுமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் டுவிட்டரின் லோகாவன குருவிக்கு பதில் நாய் பொம்மையை மாற்றினார். இதையடுத்து, தற்பொழுது மீண்டும் நாய் லோகோவிற்கு பதில் குருவி பொம்மையை லோகோவாக மாற்றியுள்ளார் எலான் மஸ்க்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN