தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்காக பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வு (UGC-NET) என்பது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இந்த நெட் தேர்வில் (UGC-NET) தேர்ச்சியடந்தால் மட்டுமே உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இதில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான முடிவுகள் நவம்பர் 5 ஆம் தேதி ( நாளை) வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மேலும், இந்த நெட் தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை இனையத்தின் மூலம் பார்ப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
1. தேர்வர்கள் www.nta.ac.in என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.
2. அதில், அவர்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி போன்றவற்றை கொடுக்கவும்.
3. அதன்பின், உள்நுழைந்து தேர்வின் முடிவுகளை தெரிந்துகொள்லாலாம்.
இதனை பற்றி மேலும் விவரங்களை அறிந்து கொள்ள, www.nta.ac.in மற்றும் [email protected] என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்லாலாம் என்று தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
RECENT POSTS
- IIT மெட்ராஸில் சூப்பரான வேலை! மாதம் ரூ.40000 முதல் ரூ.60000 வரை சம்பளம் வழங்கப்படும் @ www.iitm.ac.in
- திருப்பதி செல்லும் பக்தர்களா நீங்க.. இதோ உங்களுக்காக சூப்பர் குட் நியூஸ்..!
- இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை! விண்ணப்பிக்க ரெடியா?
- 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத போறீங்களா.. அப்ப இந்த செய்தி உங்களுக்குத்தான்..! உடனே பாருங்க…
- போச்சுடா..! பெண்கள் பேருல இது இருந்தாலும் மாசம் 1000 ரூபாய் கிடையாதாம்! வெளியான புது தகவல்!