மத்திய அரசு வேலையில் 300 மேற்பட்ட காலி இடங்கள்! விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்( UIIC) உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதில் 300 பணியிடங்கள் காலியாக உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் 16/12/2023 முதல் 06/01/2024 வரை இந்த வேலையின் அறிவிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். UIIC இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு செய்து இந்தியா முழுவதும் வேலையில் அமர்த்தப்படுவர். அதிகாரபூர்வ இணையதளத்தில் கிடைக்கும் விண்ணப்பத்தை ஆன்லைனில் நிரப்பி அப்ளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

UIIC RECRUITMENT 2024

ALSO READ : மாதம் ஒன்றுக்கு ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை ஊதியம் கொடுக்கப்படும்! தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை!

பட்டப்படிப்பு(Degree) முடித்த விண்ணப்பதாரர்கள் உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மத்திய அரசின் இந்த வேலைக்கு குறைந்தபட்ச வயது 21 ஆகவும், அதிகபட்ச வயது 30 ஆகவும் இருக்க வேண்டும். அதாவது 01/10/1993 முன்னும் 30/9/2002 பின்னரும் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். UIIC பணியாளர்களுக்கு மாத சம்பளம் ரூ. 37,000 வழங்கும்.

SC / ST / PwBD, நிறுவனத்தின் நிரந்தர பணியாளர்கள் ரூ.1000/- அப்ளிகேஷன் பீஸ், SC / ST / பெஞ்ச்மார்க் குறைபாடுள்ள நபர்கள் (PwBD), நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்கள் ரூ. 250 பீஸ் செலுத்த வேண்டும். Online Examination, Regional Language Test, certificate Verification அடிப்படையில் உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

சென்னை, கோயம்புத்தூர், தருமபுரி, மதுரை சேலம், ,தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர், ஈரோடு, விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில்
UIIC பணிக்கான தேர்வுகள் நடைபெறும்.

UIIC – ன் https://uiic.co.in தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து அனுப்பவும். மேலும் தகவல்களை Official Notification-ல் பெறலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top