பேங்க் வேலைக்கு வெயிட் பண்ணவங்க ரெடியா இருங்க! UCO வங்கியில் நீங்க எதிர்பாக்காத சம்பளத்துடன் வேலை வந்துருக்கு!

யுனைடெட் வர்த்தக வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை
யுனைடெட் வர்த்தக வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை

என்ன இன்னுமா வேலை தேடிட்டு இருக்கீங்க. உங்களுக்காகவே ஒரு சூப்பர் வேலை வந்துருக்கு. அதுவும் பேங்க் வேலை. (UCO Bank -United Commercial Bank) யுனைடெட் வர்த்தக வங்கியில் நீங்களும் பணிபுரிய இப்போவே தபால் வழியாக அப்ளை பண்ணுங்க. மாதம் ரூ.48,170 முதல் ரூ.69,810 வரை ஊதியம் தராங்கலாம். இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம்.

வேலை பெயர் : யுனைடெட் வர்த்தக வங்கியில் சிறப்பு அதிகாரி (Specialist Officer) பணிக்கான பணியிடங்களை நிரப்பவுள்ளன.

காலியிடங்கள் : 142 பணியிடங்களுக்கு பணியாட்கள் தேவைப்படுவதால் உடனே அப்ளை பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க.

கல்வித்தகுதி : விண்ணப்பதாரர்கள் CA, ICWA, CFA, BCA, B.Sc, BE/ B.Tech, Graduation, ME/ M.Tech, MCA, M.Sc, MBA, Post Graduation Degree, PGDM, Masters Degree ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும்.

ALSO READ : எட்டாம் வகுப்பு படித்தவர்கள் கூட மாதம் ரூ.50,000 சம்பளம் வாங்கலாம்! TNRD துறையில் வேலை அறிவிப்பு!

வயது வரம்பு : 01-11-2023 தேதியின்படி குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 40 வயதுடையவராக இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் விவரம் : SC, ST, PWD ஆகியோர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை, பொது, EWS, OBC விண்ணப்பதாரர்கள் ரூ.800/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

தேர்வு முறை : இப்பணிக்கு முதலில் எழுத்துத் தேர்வும் பிறகு நேர்காணலும் நடைபெறும்.

தாபல் அனுப்ப வேண்டிய முகவரி : General Manager, UCO Bank, Head Office, 4th Floor, H. R. M Department, 10, BTM Sarani, Kolkata, West Bengal-700 001.

விண்ணப்பிக்கும் தேதி : 05 டிசம்பர் 2023 முதல் 27 டிசம்பர் 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

மேலும் உதவி பொது மேலாளர் மற்றும் பிற பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விண்ணப்பப் படிவம் பற்றிய விவரங்களை Official Notification & Application Form for Assistant General Manager and Other Posts pdf மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள். மேலாளர்-ரிஸ்க் மேனேஜ்மென்ட் பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விண்ணப்பப் படிவங்களை Official Notification & Application Form for Manager-Risk Management Posts மூலம் அறிந்து பெற்றுக்கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top