இத்தனை லட்சம் கோடிக்கு யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனையா?

UPI for all these lakhs of crores Is it a money transaction-UPI Transaction Details

கடந்த 2016 ஆம் ஆண்டு யு.பி.ஐ என்று அழைக்கப்படும் ‘ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த யு.பி.ஐ வசதி ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகவும், பயனுள்ளதாகவும் இருந்து வருகிறது. இந்த வசதியை பயன்படுத்தி பல பயனாளர்கள் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு மிக எளிய முறையில் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ள முடிகிறது.

இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய இந்த யு.பி.ஐ வசதிதான் பயன்படுத்தப்படுகிறது.

இதனை தொடர்ந்து, ஒவ்வொறு மாதமும் யு பி ஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான கணக்குகளை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் மட்டுமே 678 கோடி பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது அந்த மதிப்பு 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

யு பி ஐ வசதி அறிமுகப்படுத்திய நாளிலிருந்து தற்பொழுது 6 ஆண்டுகள் வரை டிஜிட்டல் பரிவர்த்தனை கடந்த அக்டோபர் மாதத்தில்தான் அதிகமாக நடந்தது. இதனுடைய மதிப்பு ரூ.12.11 லட்சம் கோடி ஆகும். அக்டோபரில், ஐ.எம்.பி.எஸ்., சேவை வாயிலாக 48.25 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றது. இதன் மொத்த மதிப்பு 4.66 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here