செய்திகள்

ரயில்வே பணிக்கு RRB தேர்வுகள் இனி கிடையாது??? UPSC IRMS தேர்வுகள்

UPSC IRMS will conduct RRB Exams

UPSC IRMS: இனி வரும் காலங்களில் ரயில்வே துறை பணிக்கு RRB தேர்வுகள் கிடையாது! அதற்கு பதிலாக, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் UPSC-IRMS 2020 மத்திய குடிமைப்பணிகளுக்கான தேர்வு வாரியமே, ரயில்வே பணிக்கான தேர்வை நடத்தும். மத்திய அமைச்சர் ரயில்வே வாரிய தலைவர் வி.கே. யாதவ் அறிவித்தார். UPSC IRMS will conduct RRB Exams

ரயில்வே பணிக்கு RRB தேர்வுகள் இனி கிடையாது??? UPSC IRMS தேர்வுகள்

UPSC IRMS will conduct RRB Exams

இந்திய ரயில்வே துறையில் 8 சேவைகளை ஒன்றாக இணைக்கும் வகையில், IRMS என்ற ‘இந்தியன் ரெயில்வே மேலாண்மை நிறுவனம்’ (Indian Railway Management Service) என ஒரே அமைப்பாக மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.

இந்த யு.பி.எஸ்.சி தேர்வு மூலம் 5 பிரிவுகளில் ரயில்வே ஊழியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அவைகளில் நான்கு பிரிவுகள் தொழில்நுட்பம் உள்ளடக்கியது, ஒன்று மட்டும் தொழில்நுட்பம் அல்லாத பிரிவு ஆகும். தற்போது ரயில்வே சேவைகளை ஒன்றாக இணைக்கும் IRMS நிறுவனம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. யு.பி.எஸ்.சி தேர்வு எழுதுபவர்கள் IRMS உட்பட எந்த நிறுவனத்தில் வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்’ இவ்வாறு ரயில்வே வாரிய தலைவர் வி.கே. யாதவ் பேசினார்.

TNJFU தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக வேலைவாய்ப்பு சென்னை 2020

ஏற்கனவே, ரயில்வேயில் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்பம் நுட்பம் அல்லாத பணிக்கு கடந்த மார்ச் மாதம் RRB NTPC தேர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரையில் அந்த தேர்வு பற்றிய எந்த ஒரு அடுத்தக்கட்ட அறிவிப்பும் வெளியாகவில்லை. RRB NTPC தேர்வுக்கு சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker