UPSC வாரியம் வெளியிட்ட இந்திய வனப் பணிக்கான தேர்வு முடிவுகள்!

மத்திய அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் (UPSC) 2022 நவம்பர் மாதம் நடத்திய இந்திய வனப் பணிக்கான (முதன்மை) தேர்வின் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. UPSC Main Exam Results 2022

UPSC Main Exam Results 2022
UPSC Main Exam Results 2022

இதற்காக மத்திய அரசு பதவிகளுக்கு தகுந்த முறையில் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், இந்திய வனப் பணி காலியிடங்களுக்கான முதன்மை தேர்வுகள் நவம்பர் 20, 2022 முதல் நவம்பர் 27, 2022 வரை நடத்தப்பட்டது.

தற்போது இந்த தேர்வின் தேர்ச்சி அடைந்து நேர்காணலுக்கு தகுதி பெற்றவர்களின் விவரங்களை UPSC வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் நேர்காணலுக்கு வரும் போது சம்பந்தப்பட்ட அனைத்து அசல் சான்றிதழ் ஆவணங்களை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள நேரம் மற்றும் தேதி ஆகியவை மாற்றம் செய்யப்பட மாட்டாது. இந்திய வனப் பணி அதிகாரிக்கான நேர்காணல் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், தோல்பூர் ஹவுஸ், ஷாஜகான் சாலை, புது தில்லி-110 069 என்ற முகவரியில் நடக்க இருப்பதாகவும், மேலும் அதிக தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ தளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPSC 2022 Result

RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here