
தன்னையே மறந்து இன்னொரு உலகத்திற்கு நம்மை கொண்டு போய்விடும் இந்த காதல். உலகம் தோன்றிய அந்த காலம் முதல், வளர்ந்து வரும் இந்த காலம் வரை எல்லார் மனதிலும் நீங்க இடம்பிடித்து வளர்ந்து வருகிறது காதல். சைகைகள் மூலம் காதலை சொல்லும் காலம் கடந்து கடிதம் மூலம் காதலை சொல்லி வந்தார்கள். கடிதம் மூலம் காதலை சொல்லும் காலம் கடந்து வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டா, X வலைத்தளம் என எண்ணற்ற சோசியல் மீடியாக்கள் மூலமாக தங்கள் காதலை வெளிப்படுத்தி வருகிறார்கள். உங்கள் உண்மையான காதலை கவிதைகளால் எடுத்து சொல்ல… காதல் கவிதைகளை தொகுத்து வழங்கியுள்ளோம். உருக்கமான காதல் கவிதைகளால் உங்கள் காதலை சொல்லுங்கள்!
Love Feel Tamil Images

மனதோடு மாலையாய்
நீ என்னை சூடிக்கொள்
உன் மனதில்
உதிராத மலர்களாய்
நான் இருப்பேன்

கண்களை மூடினாலே
கனவாக வந்து
தங்கி கொள்கிறாய்…
என் விழிகளுக்குள்!

ஒப்பனைகள்
தேவையில்லை
உன் காதல் போதும்
என்னை அழகாக்க!

தொலைவில் உன் குரல்
கேட்டாலும்
மனம் ஏனோ பறக்கின்றது
பட்டாம்பூச்சியாய்..!

உன் மூச்சி காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்,
நான் காற்றில்லா
மண்டலத்திலும்
உயிர் வாழ்வேன்!

நீ கட்டளையிடாமலேயே
கட்டுப்பட்டுக்கிடக்கின்றேன்
உன் அன்பில்…

உனக்காக எதையும்
இழந்து விடுவேன்
எதற்காகவும்
உன்னை இழக்க மாட்டேன்

நீயே கேட்டாலும்
விட்டு கொடுப்பதாக
இல்லை,
உன் மீதான
என் காதலை!

நான் கேட்காமல்
எனக்கு கிடைத்த
வரம் நீ…
இப்பொழுது
வரமாக கேட்கிறேன்
என்றும் உன்னை பிரியாத
வாழ்வு வேண்டும் என்று..!

ஆயிரம் சண்டைகள்
உன்னோடு
நான் போட்டாலும்
நீ இல்லாமல்
என் வாழ்க்கை இல்லை!

போதைப் பழக்கம்
இல்லாத நான்
தினம் தினம்
போதையாகிறேன்
உன் விழிகளை
காணும் போது

காதல்
கவிதைகள்
எதற்கு
என் காதலே
கவிதையாக
அமைந்துவிட்ட
பிறகு..!

நொடிக்கு நொடி
உரசி செல்லும்
மூச்சுக்காற்று போல
என் இதயத்தை
உரசி செல்கிறது
உன் நினைவுகள்..!