அமெரிக்க ஓபன் டென்னிஸ் – இறுதிப்போட்டிக்கு முன்னேறி செல்கிறார் கோகோ காப்…!

Today Sports News 2023

Today Sports News 2023
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறி செல்கிறார் கோகோ காப்...! 2

நியூயார்க் நகரில், ‘கிராண்ட்ஸ்லாம்’ உயர்வு பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று, ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் மேத்யூ எப்டென் கூட்டணியுடன் மோதி, வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

Also Read >> சென்னையில் திடீரென பெய்த கனமழையால் விமான சேவை பாதிப்பு! பயணிகள் கடும் அவதி…!

இதனை தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த கோகா காப், இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கரோலினா முச்சோவாவை எதிர்கொண்டார்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் திறமையாக விளையாடிய அமெரிக்காவைச் சேர்ந்த கோகா காப், கரோலினா முச்சோவாவை 6-4 மற்றும் 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.