வைகுண்ட ஏகாதசி : திருப்பதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பை காண வந்த ஏராளமான பக்தர்கள்!

Vaikunda Ekadasi A large number of devotees came to see the opening of the gates of heaven at the Tirupati temple

ஆந்திர மாநிலத்தில் மிகவும் சிறப்புமிக்க திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு “உலக பணக்காரக் கோவில்” என்ற மற்றொரு பெயரும் உண்டு. ஏனென்றால் இந்த கோவிலின் தினசரி உண்டியல் காணிக்கையே பல லட்சம் கோடியாம். இந்த கோவிலுக்கு வெளி மாநிலம் மட்டுமல்லாமல் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர். அதிலும் குறிப்பாக விஷேச நாட்களில் திருப்பதி கோவிலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று(டிசம்பர் 23) வைகுண்ட ஏகாதசி மிகவும் விமர்சியாக கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள வைணவ தளங்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று சொர்க்க வாசல் திறக்கப்படும். அதன்படி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா என்ற கோஷங்களுக்கு இடையே சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

ALSO READ : நெருங்கி வரும் பொங்கல் பண்டிகை : மக்களுக்கு காத்திருக்கும் டபுள் ஜாக்பாட்! தமிழக அரசின் புதிய திட்டம்!!

தமிழகத்தை போலவே ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் வைகுண்ட ஏகாதசி மிகவும் விமர்சியாக கொண்டாடப்படும். அந்த வகையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நள்ளிரவு 1.40 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு திருப்பதி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இதைத் தொடர்ந்து மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top