வந்தாச்சி பொங்கல் பண்டிகை..! கடைவீதிகளில் அலைமோதும் கூட்டம்!

Vandachi Pongal Festival Crowds in the shopping streets-In Pongal Celebration Crowd Will Be Increase In Shopping

பொங்கல் பண்டிகையானது தமிழகம் முழுவதும் நாளை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் கரும்பு, மஞ்சள் கிழங்கு, மா இலை தோரணம், தேங்காய், பழம் மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்து வருகினறனர்.

இதனால் நகரின் நான்கு ரத வீதிகளிலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இதன் காரணமாக நகரின் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் தங்களது சிறந்த பனியின் மூலம் உதவிகளை செய்து வாகனங்களின் கூட்ட நெரிசலை குறைத்து வருகிறனர். இருந்தாலும் நாளை பொங்கல் பண்டிகை என்பதால் அதிக கூட்ட நெரிசலால் நீண்ட நேரமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலைகளில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு வருகிறது.

மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பெரும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டது.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here