வந்தாச்சி வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் – விரைவில் அறிவிப்பு!

Vandachi Whatsapp New Update Notification Coming Soon-WhatsApp New Update

வாட்ஸ்அப் செயலி நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ஒரு முக்கிய சமூக செயலியாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான மெட்டா நிறுவனத்தின் மிக முக்கியமான வாட்ஸ் அப் (WhatsApp) செயலில் சமீபக்காலத்தில் பல புதிய அப்டேட்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில், பயனாளர்களின் தனி உரிமையை மேம்படுத்தும் வகையில் புதிய அம்சங்கள் கொண்ட அப்டேட்டை உருவாக்க உள்ளதாக திட்டமிட்டு வருகிறது. இந்த புதிய அம்சங்களில் பயனாளர்கள் தங்களுக்கே மெசேஜ் அனுப்பிக் கொள்ளும் வசதி மேற்கொள்ளபோவதாக தெரிவித்துள்ளது.

இந்த புதிய அம்சங்கள் கொண்ட அப்டேட்டுகள் வாட்ஸ் அப் செயலியில் வெளியிடப்பட்டால் அதிகமான தகவல்களை சேமிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. பயனாளர்கள் தங்களுக்கே மெசேஜ் அனுப்பிக் கொள்ளும் வசதி குறிப்பிட்ட ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. இந்த சிறப்பம்சங்கள் கொண்ட அப்டேட்டை அனைவரும் பெறும் வகையில் வாட்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here