வாரிசு Vs துணிவு..! வசூலை வென்றது யார்?

Varisu Vs Thunivu.. Who won the collection-Varisu Vs Thunivu Today Collection

கடந்த மாதம் முதலே அனைத்து இளைஞர்கள் மத்தியிலும் பேசப்பட்ட வார்த்தை என்னெவென்றால் அது “வாரிசு” மற்றும் “துணிவு” என்பதுதான். இந்த காலகட்டத்தில் அதிக ரசிகர்களை கொண்டவர்களாக விஜய் மற்றும் அஜித் இருந்து வருகிறார்கள். தல மற்றும் தளபதி நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் எப்படி இருக்கும்? என்று ரசிகர்கள் பலரும் காத்திருந்தனர்.

இந்நிலையில், இவர்கள் நடித்த படமான “துணிவு” மற்றும் “வாரிசு” படத்தின் ட்ரைலர் கடந்த மாதம் வெளிவந்த நிலையில் ரசிகர்கள் பலரும் இந்த பொங்கல் தல தளபதி பொங்கலாக இருக்கும் என்று விமர்சித்து வந்தனர்.

இந்த சூழ்நிலையில், இந்த இரண்டு படங்களும் ஒரே நாளான ஜனவரி 11-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டப்பட்டது. இதனால் ரசிகர்கள் பலரும் இந்த பொங்கல் தல பொங்கலா? தளபதி பொங்கலா? என்று விமர்சித்து வந்தனர்.

இந்த இரண்டு படங்களும் கடந்த 11-ம் தேதி வெளியான நிலையில், வசூலை அள்ள போவது தலையா? தளபதியா? இதில் வெள்ள போவது யார்? என்று கேள்வி எழும்பி வந்தது. இந்நிலையில், உலக முழுவதும் 2 நாட்களில் வசூலானது கணக்கிடப்பட்டுள்ளது. அதில், வாரிசு படம் 2 நாட்களில் ரூ. 80 கோடியும், துணிவு படம் 2 நாட்களில் ரூ. 65 கோடியும் வசுலாகியுள்ளதாக தகவல் வெளியானது.

மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலுவலங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் இனி வரும் நாட்களில் நல்ல வசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here