Breaking: ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு – அறிவிப்பு:

February Month 2021

Velaivaippu Seithigal February Month 2021

Current Affairs in Tamil February Month 2021-22: தினமும் நடைபெறும் நிகழ்வுகள், செய்திகள் (Latest News in Tamil) போன்றவற்றை எங்கள் இணையத்தில் வழங்கி வருகிறோம். கல்வி செய்திகள் (Education News), வேலைவாய்ப்பு செய்திகள் (Employment News in Tamil) போன்ற அனைத்து தகவல்களையும் இந்த பக்கத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

பிப்ரவரி மாத செய்திகள் 2021

Velaivaippu Seithigal February Month

Velaivaippu Seithigal February Month 2021

26 பிப்ரவரி 2021

1. Breaking: ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு – அறிவிப்பு:
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி 31-ந் தேதி நடந்த மத்திய தகுதித் தேர்வு முடிவுகள் http://ctet.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. முதல் பாடப்பிரிவில் 12,47,217 பேர் தேர்வு எழுதிய நிலையில் 4,14,708 பேரும், 2-வது பாடப்பிரிவில் 11,04,454 பேர் தேர்வு எழுதிய நிலையில், 2,39,501 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. மாணவர்களின் கல்விக்கடன் ரத்து? – 3 மணி நேரத்திற்குள் அறிவிப்பு:
விவசாயிகள் கடன், நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்க உள்ளதால், அதற்கு முன்னதாக கல்விக்கடன் ரத்து குறித்து அறிவிப்பு வெளியாகுமா என்று மாணவர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது

25 பிப்ரவரி 2021

1. Breaking: இந்த ஆண்டும் 9, 10 மற்றும் 11-ஆம் மாணவர்கள் ஆல் பாஸ் – முதல்வர் பரபரப்பு அறிவிப்பு:
கொரோனா அச்சம் காரணமாக, நடப்பு ஆண்டில் 9, 10 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இந்த மூன்று வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வின்றி ஆல் பாஸ் அளிக்கப்படுவதாகவும் சட்டப்பேரவையில் முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்களை கேட்ட பின்பே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

24 பிப்ரவரி 2021

  • சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் மூலம் இளநிலை, முதுநிலை கணினி பயன்பாடு, முதுநிலை பட்டப்படிப்பு, முதுநிலை வணிக நிர்வாகவியல் படிப்புகள் ஆகியவற்றில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடங்குகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் http://online.ideunom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
  • தமிழகத்தில் ஏப்ரல் மாத இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, பள்ளிகளில் ஏப்ரல் 15 தேதிக்குள் பாடத்திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததும் 10, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
  • கொரோனா காரணமாக யுபிஎஸ்சி (UPSC) தேர்வு எழுத தவறியவர்களுக்கு மீண்டும் கூடுதல் வாய்ப்பு கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. யுபிஎஸ்சி கூறியதை ஏற்றும், கூடுதல் வாய்ப்பு வழங்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • தெலங்கானா மாநிலத்தில் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு பெற்றோரிடம் இருந்து கட்டாயம் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிகள் திறப்பிற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், தமிழகத்தில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை அடுத்த மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

23 பிப்ரவரி 2021

  • அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகம் செய்யப்படும் என்று பட்ஜெட்டில் துணைமுதல்வர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இதுவரை 11, 12-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் கணிப்பொறி அறிவியல் பாடம் கற்பிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 6-ஆம் வகுப்பு முதல் கற்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு வேலைகள்:

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

பொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021

தமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021
பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 20218,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021
இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021டிபென்ஸ் ஜாப்ஸ் 2021
இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021
அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021
ICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021State Government Jobs 2021

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button