விஜய் ரசிகர்களே வந்தாச்சு ‘வாரிசு’ படத்தின் புதிய அப்டேட்! வாங்க என்னென்னு பாப்போம்?

Vijay fans have come for the new update of Varisu What will we buy-Varisu Movie Upadate

அனைவரும் அவளோடு எதிர்ப்பார்த்துகொண்டிருந்த நடிகர் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்படுவதாக அறிவிப்பு வந்துள்ளது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இயக்குனர் வம்சி இந்த ‘வாரிசு’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஒரு எமோஷனல் கலந்த குடும்பபாடமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. . தில் ராஜு தயாரிப்பில் உருவான இப்படத்தில் நடிகர் விஜய் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

‘வாரிசு’ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக வித்தியாசமானவும், இவர்களுடன் இணைந்து பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் இசையமைப்பாளராக தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் மூலம் முதன்முறையாக விஜய் படத்துக்கு இசையமைக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அனைவரும் அவளோடு எதிர்ப்பார்த்துகொண்டிருந்த வாரிசு படத்தின் முதல் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில், வாரிசு படத்தின் இயக்குனர் வம்சி பேட்டியளிக்கும்பொழுது அடுத்த வாரம் முதல் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான் என தெரிவித்தார்.

இந்நிலையில், வாரிசு படத்தின் தாயரிப்பு நிறுவனமான ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் 10:45AM-க்கு அறிவிப்பு என ட்விட்டரில் பதிவிட்டிருந்தது. இந்தனை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் 10:45 மணியிலிருந்து மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கத்துகொண்டிருந்த நிலையில், அருமையான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து, உடனடியாக ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here