கணேச சதுர்த்தி வழிபாட்டு மந்திரங்கள்

Vinayagar Chathurthi Easy Mantras: தெய்வங்களில் முழுமுதற் கடவுளாய் விளங்குகிறார் வினாயகர், அனைத்து வழிபாட்டு முறையிலும் இவரை வணங்கிய பிறகுதான் மற்ற எந்த ஒரு தெய்வங்களுக்கு பூஜைகள் அல்லது வேலைகள் செய்ய தொடங்குவார்கள். எந்த ஒரு செயல் செய்வதற்கு முன்பும் இவரை வணங்கி தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்பது அனைவரின் நம்பிக்கை. கணபதியை வணங்கி அவர் ஆசி பெற சில எளிய மந்திரங்கள்.

vinayagar chathurthi easy mantras to say when worshiping god ganapathi

vinayagar chathurthi easy mantras
vinayagar chathurthi easy mantras

ஓம் கண் கணபதியே நமோ நம! ஸ்ரீ சித்திவிநாயக் நமோ நம! அஸ்தா விநாயக் நமோ நம! கணபதி பாப்பா மொரையா! இந்த விநாயகர் மந்திரம் எல்லா தடைகளையும் நீக்கி, உங்கள் வாழ்நாள் முழுவதும் வெற்றிக்கு வழிகாட்டட்டும். இனிய விநாயகர் சதுர்த்தி.

மூலப் பொருளே முதல்வா போற்றி
மூவுலகும் தொழும் தேவா போற்றி
காலம் கணக்கு கடந்தாய் போற்றி
காத்தற்பொருளே ஆனாய் போற்றி
ஓலமிட்டழைத்தோம் வருவாய் போற்றி
ஓமெனும் ஒளியில் ஒளிர்வாய் போற்றி
ஞாலம் முழுதும் காப்பாய் போற்றி
நாளும் தொழுதேன் போற்றி போற்றி

பாலும் தெளிதேனும்
பாகும் பருப்பும்
இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலம் செய் துங்கக் கரி முகத்து
தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா !

maha ganapati mantra in tamil
maha ganapati mantra in tamil

முதல் கடவுள் நீதான்
எங்கள் குல கடவுளும் நீதான்
உன்னை நாடி வரும் எங்கள்
உள்ளத்தை சுத்தமாக்கி
வாழ்க்கையை நல்லதாக்கி
வாழ்ந்திட வையப்பா
வையகம் போற்றும் எம் விநாயகா !

சரணம் சரணம் கணபதியே
சக்தியின் மைந்தா கணபதியே
வரணும் வரணும் கணபதியே
வந்தே அருள்வாய் கணபதியே
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

உன்னை நினைத்து உயிர்
உருகி செய்யும் செயல் யாவுமே
விஜயமாக்கும் விநாயகனே !
முழு முதற் கடவுளே !
வினை தீர்க்கும் கணபதியே!
விநாயகர் சதுர்த்தி அன்று உன்னை
வெகு கவனமாக பூஜிக்கிறோம்
அருள்வாய் கணேசா !

Vinayagar slokas tamil
Vinayagar slokas tamil

உடை கூட ஓர் முழம்தான்
உணவும் ஒரு பிடிதான்
நடைபாதையோரம் வாழ்ந்திருக்கும் நாயகனே
வேலவனுக்கு முன்னவனே
உன்னை வணங்காமல்
செயலை தொடங்குபவர் யார்..

உன் முன் உடைத்திட்ட சிதறுகாய்
கண்முன் உணவாகும் சிலருக்கு
மண்ணில் நல்லவர்கருள்புரிவாய்
பொல்லாரை மாற்றிடுவாய்
எல்லோரும் போற்றும்
எம் ப்ரிய பிள்ளையார் பெருமானே!

உன்னை நேசிக்க
கல்வி தேவையில்லை காதல் போதும்
உன்னை சிலையாய் வடிக்க
சிற்பி தேவையில்லை சிறு மஞ்சள் போதும்
பொன்சிலையாய் மாறி எங்களை
காக்கும் எங்கள் கணபதியே போற்றி

பார்வதி மைந்தனே
பார் புகழ் முதல்வனே
ஜோதி வடிவினன் மகனே
சோகம் நீக்கும் என்பெருமானே
காதலோடு கனிந்துருகி பூஜிக்க
கர்மங்களை அகற்றி காத்தருள்பவனே !
கஜானனே ! கணபதியே! சரணடைந்தோம் உன் பாதம் !

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !

jobstamil facebook
telegram jobstamil
jobstamil twitter
jobstamil whatsapp

RECENT POSTS:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here