உதயநிதி ஸ்டாலினின் வைரல் வீடியோ..! அம்மா கேட்ட கேள்வி? அப்பா சொன்ன பதில்!

0
Viral video of Udayanidhi Stalin The question asked by the mother Dad's answer-CM Stalin Answer For His Wife Durga Ask Question

உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் லவ் டுடே படம் ஒரு சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

லவ் டுடே படத்தில், பிரதீப்பும், இவானாவும் காதலர்களாக நடித்துள்ளனர். மேலும், யோகிபாபு, இவானா, சத்யராஜ் உள்ளிட்டோர் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். பிரதீப் மற்றும் இவானா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்கு இவானாவின் அப்பாவான சத்தியராஜ் இருவருக்கும் ஒரேயொரு கண்டிஷன் போட்டார். அதில், அவர்கள் இருவரது செல்போனும் ஒரு நாளைக்கு மாற்றி கொள்ள வேண்டும் என்று கூறினார். அவர் சொன்ன கண்டிஷனை ஏற்று இருவரும் செல்போனை மாற்றி கொண்டனர். இதன்பின்னர் ஏற்படும் சிக்கல்களும், சுவாரசியங்களும்தான் படத்தின் கதை.

லவ் டுடே படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த 4-ஆம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்த படம் வெளியாகிய முதல் வாரத்திலேயே மக்களிடியே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் விகடன் நிறுவனத்திற்கு பேட்டியளித்தபோது, இந்த லவ் டுடே படத்தை குறித்து பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், லவ் டுடே படம் என் அப்பாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அம்மாவும் சூப்பராக இருக்கிறது என்று சொன்னார்கள். பின்னர் இந்த மாதிரி எல்லாரும் செல்ஃபோனை மாற்றிக் கொள்ளலாமா என்று கேட்டார்கள். அதற்கு நானும் அப்பாவும் வேண்டவே வேண்டாம் என மறுத்துவிட்டோம் என்று கூறினார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here