டி20 உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு விராட் கோலி வெளியிட்ட பதிவு…! இணையத்தில் வைரல்!

0
Virat Kohli's post for England's victory in T20 World Cup Viral on the Internet-T20 World Cup Virat Kohli Reaction on England Won

2022 டி20 உலக கோப்பை கடந்த மாதம் அக்டோபர் 16 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. இந்நிலையில், நேற்றுடன் டி20 உலக கோப்பை போட்டி நிறைவு பெற்றது. டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடினர். இதில் வெற்றிபெரும் அணிகளுக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 13 கோடி பரிசுத்தொகையாக கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இதில், சாம் கரன் இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வானார். இந்த வெற்றி இங்கிலாந்து அணிக்கு கிடைத்த 2-வது வெற்றியாகும். இதற்குமுன், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது குறிப்பிட தக்கது.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து, தற்பொழுது இங்கிலாந்து அணியில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களும், மார்கனின் நிகரில்லா திட்டங்களும் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

இங்கிலாந்து அணியின் இந்த வெற்றியை தொடர்ந்து, இந்திய அணியின் வீரரான விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த பதிவு இணையத்தில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் மூத்த வேகப்பந்துவீச்சாளர், பாகிஸ்தான் அணியின் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் இதயம் நொருங்கிப் போய்விட்டதாக பதிவிட்டிருந்தார். அதற்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஷமி, ‘இதுதான் கர்மா என்பார்கள்’ என பதிவிட்டுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here