வெளிநாட்டுக்கு செல்ல ஆசையா? ஒரு அறிய வாய்ப்பு! பாஸ்போர்ட் அலுவலர் அறிவிப்பு

Want to go abroad A chance to learn Passport Officer Notification-Passport Special Camp

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள் மற்றும் சுற்றுலா மேற்கொல்பவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது வழக்கம். இந்நிலையில், பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்களுக்காக பாஸ்போர்ட் சேவை மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது, பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்த சிறப்பு முகாம் செயல்படுத்தப்படுகிறது. பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு காவல்துறை அனுமதி சான்றிதழ் (பி.சி.சி.) பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1,400-க்கும் மேல் வந்துள்ளதால் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உட்பட்ட சாலி கிராமம், அமைந்தகரை, தாம்பரம், புதுச்சேரி ஆகிய 4 பாஸ்போர்ட் சேவை மையங்களிலும் நவம்பர் 5 ஆம் தேதி (நாளை) சிறப்பு முகாம் நடைபெறும்.

பொதுமக்களின் வசதிக்காக இந்த சிறப்பு முகாம் நடைபெறுவதால் இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ்.கோவேந்தன் தெரிவித்துள்ளார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here