ரேஷன் கடைகளுக்கு கூட்டுறவுத்துறை விடுத்த எச்சரிக்கை…! அச்சத்தில் ரேஷன் ஊழியர்கள்!

0
Warning issued by Cooperative Department to ration shops Ration employees in fear-Ration Cooperative Department To Complaints On Getting Wrong Text Messages

தமிழகத்தில் ரேஷன் கடை மூலம் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. எண்ணெய், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பல பொருட்கள் வெளி மார்க்கெட்டை காட்டிலும் மிக குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் மட்டும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 34 ஆயிரத்து 790 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகின்றனர். இந்த ரேஷன் கடைகள் மூலம் பல கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுகின்றனர்.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ரேஷன் கடைகளில் போலி பில் போடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதாவது வாடிக்கையாளர்கள் வாங்காத பொருட்களுக்கும் சேர்த்து பில் அனுப்பப்படுவதாகவும், ஒரு பொருள்கூட வாங்காதவர்களுக்கும் பொருட்கள் வாங்கியதுபோல் குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாகவும் குற்றச்சாடுகள் எழுந்துள்ளன.

இதன் காரணமாக, கூட்டுறவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில் இனி போலியாக பில் போடும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த முறைக்கேடுகளை கண்காணிக்காத அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here