தென்மாவட்ட மக்களே உஷாரா இருங்க… வருகிற 31 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!

Weather Upadte People of South district be careful Heavy rain is likely till 31st

தமிழக தென்மாவட்டங்களில் கடந்த வாரம் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் விவசாய நிலங்கள் சேதமடைந்ததுடன் ஆடுகள், மாடுகள் என அனைத்தும் உயிரிழந்தது. வெள்ளம் காரணமாக பெரும்பாலான மக்கள் வீடுகளை இழந்து தவித்து நின்றனர். இந்நிலையில், தற்பொழுது தென்மாவட்டங்களில் சூழ்ந்த வெள்ளநீர் வடிந்து வருவதால் மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இதனையடுத்து, வெள்ள பாதிப்பிலிருந்து மீள முடியாமல் இருக்கும் தென் மாவட்ட மக்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி செய்தியை வானிலை ஆய்வு மையம் செளியிட்டுள்ளது. அதன்படி, கிழக்கு காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ : மீண்டும் மருத்துமனையில் அனுமதிக்கபட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்..!

மேலும், நாளை(டிசம்பர் 28) தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளிலும், வருகிற 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய பெய்யக் கூடும் என்றும் வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கும், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top