ஆரஞ்சு அலர்ட் எதிரொலி : தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

Weather Update Orange Alert Echo Chance of very heavy rain in 14 districts of Tamil Nadu today

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களாகவே பல்வேறு இடங்களில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக டிசம்பர் மாத தொடக்கத்தில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இந்த மிக்ஜம் புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்ததுடன் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மிக்ஜம் புயல் பாதிப்பிலிருந்தே இன்னும் வெளிவர முடியாமல் இருக்கும் மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி தரும் வகையில் வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களுக்கு தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

ALSO READ : குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் தமிழக அரசின் ரூ.6 ஆயிரம் நிவாரணம் கொடுக்க போறாங்களா..? சற்றுமுன் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

மேலும், அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top