பொங்கல் 2024 பண்டிகையில் வீடே மணக்கும் சர்க்கரை பொங்கலை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்

இரண்டு வகை பச்சரிசி உள்ளது. பொங்கல் வைக்க பொங்கல் பச்சரிசி வாங்க வேண்டும். மாவு பச்சரிசி வாங்க கூடாது.

பாகு வெல்லம் என்று கேட்டு வாங்குங்கள். லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும் வெல்லம் வாங்க கூடாது. நல்ல கலர் மற்றும் நல்ல சுவை கிடைக்கும்.

இறுகிய பொங்கலை தளர்வாக்க பால் அல்லது வெந்நீர் ஊற்றுவார்கள். இதற்கு பதிலாக சிறிதளவு தேங்காய் பால் சேர்த்தால் அருமையான சுவை கிடைக்கும்.

சர்க்கரை பொங்கலில் துருவிய தேங்காய் or சிறு சிறு துண்டுகள் சேர்ப்பார்கள். நேரடியாக பொங்கலில் சேர்க்காமல் நெய் விட்டு வதக்கி சேருங்கள்.

ஏலக்காய் பொடியுடன் இரண்டு சிட்டிகை சுக்கு பொடி சேர்த்தால் பொங்கலில் இன்னும் சுவை கூடும்.

பொங்கலை கீழே இறக்கி வைக்கும் போது ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்தால் கோவிலில் கொடுக்கும் பிரசாத பொங்கலின் சுவையும் மனமும் கிடைக்கும்

தண்ணீரில் வெல்லம் கரைந்ததும் வடிகட்டி வேறு பத்திரத்திற்கு மாற்றி நெய் சேர்த்து கொதிக்க விடுங்கள். கூடுதலான சுவை கிடைக்கும்.