தலைவலி உயிர் போகுதே... என்னால் வலி தாங்க முடியவில்ல என கவலைப்படுறீங்களா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க. உங்க தலைவலி காணாமலே போய்விடும்.

1.வெந்நீர் குளியல்

வெதுவெதுப்பான வெந்நீரால் தலைக்கு குளிப்பதால் தலைவலி குறையும்

2.மசாலா டீ

கொத்தமல்லி விதை, சுக்கு, கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து சூடாக டீ வைத்து குடித்தால் தலைவலி சரியாகிவிடும்

3.தண்ணீர் குடிக்கவும்

நாம் தினமும் தண்ணீர் குடிக்கவில்லையென்றால் தலைவலி வரும். எனவே தண்ணீர், பழச்சாறு, இளநீர் குடிப்பதால் தலைவலி குறையும்

4.பற்று போடுதல்

இரண்டு கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் சொட்டு லாவண்டர் எண்ணெய் மற்றும் ஒரு சொட்டு ஆலிவ் எண்ணெய் விட்டு, ஒரு காட்டன் துணியால் நனைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி தீரும்

5.ஆயில் மசாஜ்

3 சொட்டு மிளகுகீரை எண்ணையோடு ஒரு சொட்டு பாதாம் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணை கலந்தது நெற்றியில் மசாஜ் செய்வதால் தலைவலி குறையும்

6.சந்தனப்பொடி

சந்தனத்தை நீரில் சேர்த்து அதனை நன்றாக கலந்து நெற்றியில் பூசினால் தலைவலி குறையும்

7.ரோஸ்மேரி எண்ணெய் மசாஜ்

ரோஸ்மேரி எண்ணெயை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்தால் தலைவலியில் இருந்து விடுதலை பெறலாம்

8.புதினா இலை

புதினா இலைகளை நன்றாக இடித்து சாறு எடுத்து அதனை நெற்றி பொட்டில் பூசினால் தலைவலி குறையும்

அட... இது தெரியாம போச்சே! சுரைக்காய்ல இவ்ளோ நன்மைகளா!