பலருக்கு ஒவ்வொரு நாளும் காபியுடன் தான் விடியலே ஆரம்பிக்கின்றது. ஆனால் இந்த பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் காபி குடிக்கவே கூடாது ... அப்படி தொடர்ந்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

உடல் எடை

நம் உடலில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகளை கரைக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பதாக காபி குடிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது.

இதய நோய்

ஒருவர் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 கப் காபிக்கு மேல் குடித்தால் இதய நோய் பிரச்சனைகளை உண்டாக்கும்

கர்ப்பிணி பெண்கள்

பெண்கள் கருவுற்ற நிலையில் காபியின் அளவை குறைத்துக் கொள்வது உங்கள் வயிற்றில் உள்ள குழந்தையில் ஆரோக்கியத்திற்கு நல்லது

காபி யார் அருந்தக்கூடாது

நீரிழிவு எதிர்ப்பு மருந்துகள், தியோபிலின், பினோதியாசின்கள், ஆன்டிகோகுலண்ட் மருந்துகள்,டிரைசைக்ளிக் ஆண்டிடிரஸண்ட்ஸ், ஆஸ்துமா மருந்துகள், கருத்தடை மருந்துகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளும் நபர்கள் காபியை குடிக்க கூடாது

உடலில் நடுக்கம்

ஒரு நாளைக்கு 400 மில்லி கிராமிற்கு மேல் காபியின் அளவை நீங்கள் எடுத்துக்கொண்டால் உடலில் நடுக்கம் ஏற்படும்

எந்த நேரத்தில் காபி குடிக்கலாம்

மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரைக்கு காபி குடித்தால் அது ஆரோக்கியத்திற்கு நல்லது

தூக்கமின்மை பிரச்னை

சிலருக்கு காபி குடித்தால் நெஞ்செரிச்சல் மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே தூங்க செல்லும் நேரத்தில் குடித்தால் உங்களுக்கு தூக்கமின்மை பிரச்னை உண்டாகும்

காலையில் காபி குடிப்பது

பெரும்பாலானோர் காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கவே கூடாது

காலைல வாக்கிங் போலாமா? சாயங்காலம் வாக்கிங் போலாமா?