கமல்ஹாசனின் KH234 "தக் லைப்" படத்தின் அறிமுக வீடியோ வெளியானது...!

1987ம் ஆண்டு நாயகன் படத்தில் இணைந்த கமலும், மணிரத்னமும் தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.

கமலின் 234வது படமான இந்த படத்திற்கு "தக் லைப்" என தலைப்பிடப்பட்டுள்ளது

படத்தில் கமல்ஹாசன், துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

படம் 2024ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் அறிமுக வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது.

வீடியோவில் கமல்ஹாசன் தனக்கே உரிய ஸ்டைலில் ரங்கராய சக்திவேல் நாயக்கன் என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறார்.

வெளியான அறிமுக வீடியோவில் கமலின் ஆக்ஷன் காட்சிகள் கவனம் ஈர்க்கின்றன!

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.