நாம் ஆரோக்கியமான வாழ்கையை வாழவேண்டும் என்றால் தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். காலை அல்லது மாலை என எந்த நேரத்தில் வாக்கிங் செல்லலாம்? இதை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க...

தினமும் நடைப்பயிற்சி செல்ல விரும்பினால், உங்களுக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைகின்றதோ அப்போது நீங்கள் வாக்கிங் செல்லலாம்

பிஸி ஷெட்யூலுக்கு நடுவில் நடைப்பயிற்சி செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தால் அது மனஅழுத்தத்தை ஏற்ப்படுத்தும். வாக்கிங் என்பது நாம் செய்யக்கூடிய ரொட்டீன் வாழ்கையில் எளிதாக இருக்க வேண்டும்

நீங்கள் வாக்கிங் போகும் நேரம் உங்களுடைய வாழ்க்கை முறையுடன் ஒத்துப்போகுமாறு இருக்க வேண்டும்

உங்களுடைய நடைப்பயிற்சி பரப்பான காலை நேரம் அல்லது மிக அமைதியான மாலை நேர என எதுவாக இருந்தாலும் செல்லலாம்

கடுமையான உடற்பயிற்சி சில நேரங்களில் மன அழுத்தத்தை ஏற்ப்படுத்தும். எனவே நீங்கள் வாக்கிங் செல்லும் நேரம் உங்களுக்கு உற்சாகமானதாகவும், நிறைவானதாகவும் இருக்க வேண்டும்

நடைப்பயிற்சியின்போது முடிந்தவரை நீங்கள் வெறுங்காலுடன் நடக்க வேண்டும். அது உங்கள் உடலை சீராக வைக்கும்.

மாலை அல்லது இரவு நேரங்களை ஒப்பிடும்போது காலை நேரத்தில் மாசுபாடு குறைவாக உள்ளது. எனவே காலை நேரத்தில் நடைபயிற்சி  செய்வது மிக பயனுள்ளதாக இருக்கும்

வயதான நபர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் இருந்தால், அவர்களுக்கு  அதிகாலை நேரத்தில் ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும். எனவே அவர்கள் மிக விரைவாக நடக்க கூடாது. குறிப்பாக இவர்கள் குளிர்காலத்தில் வாக்கிங் செல்வதை தவிர்க்க வேண்டும்.

அடடா... துளசி தண்ணீர்ல இவ்ளோ பயன்கள் இருக்கா?