கேரளாவில் களைகட்டும் ஓணம் பண்டிகை : புத்தாடை அணிந்து 64 வகை உணவு சமைத்து உற்சாக கொண்டாட்டம்!

மலையாள ஆண்டின் முதல் மாதம் கேரளாவில் சிங்கம் என்ற பெயரில் ஆவணி மாதம்தான் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இந்த சிங்கம் மாதத்தில் 10 நாட்களுக்கு அஸ்தம் நட்சத்திரத்தில் அத்தப்பூ கோலத்துடன் துவங்கி திருவோணம் நட்சத்திரம் வரை சாதி, மத வேறுபாடுகளை மறந்து ஓணம் பண்ணிடிகையை கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

Weeding Onam Festival in Kerala Dress up in new clothes and cook 64 types of food and celebrate with excitement read it now

இந்த அத்தப்பூ கோலம் 10 நாட்களிலும் 10 வகை பூக்களை வைத்து கோலம் போட்டு பெண்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில், இன்று(செவ்வாய்க்கிழமை) கேரளா மக்கள் அதிகாலையிலேயே எழுந்து வீட்டு வாசலில் அத்தப்பூ கோலம் போட்டு கோலாகலமாக ஓணம் பண்ணிடிகை கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், அனைவரும் புதிய ஆடைகள் அணிந்து கோயில்களுக்கு சென்று வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள்.

Also Read : தமிழக விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு!!

மேலும், திருவனந்தபுரத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகை முன்னிட்டு ஒரு சாலை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது அதனை பார்ப்பதற்கே அழகாக காட்சியளிக்கிறது. அதன்பிறகு, அக்கம்பக்கத்தினருக்கும், தங்களது சொந்தபந்தங்களுக்கு உடை, உணவு மற்றும் பரிசு பொருட்களை அளித்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறி கொண்டனர். அதன்படி, “கானம் விற்றாவது ஓணம் உண்” என்பது கேரளா பழமொழி. அதற்கேற்ற, அறுசுவைகளில் 64 வித உணவு வகைகளை கசப்பை தவிர மற்ற காய்கறிகளை வைத்து கேரள மக்கள் தயாரித்து பரிமாறி கொண்டாடி வருகிறார்கள்.