அடிக்கடி HR பிரஷர்களிடம் கேட்கும் இன்டர்வியூ கேள்விகள் என்னென்ன?

0
What are the most common interview questions HR recruiters ask at Freshers

கல்லூரி படிப்பை முடித்தப் பிறகு வீட்டின் சூழ்நிலை மற்றும் அவர்களின் லட்சியத்திற்காக வேலையை தேடுகின்றனர். ஒருவருக்கு வேலை கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. அவ்வாறு ஒரு வேலையைத் தேடும் பொது அதில் பலவித போராட்டங்களை சந்திக்கின்றனர்.

நேர்முகத் தேர்வு என்பது நிறுவனத்தில் பணிபுரியும் HR என்பவர் வேலை தேடுபவரைப் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள, அவர்களின் திறன் மற்றும் பேச்சுத்திறமையை அறிவதற்காக அவர்களிடம் பலவித கேள்விகளை கேட்கிறார்கள். அந்த கேள்விகள் அனைத்தும் வேலை தேடுபவரைப் பற்றியே அமையும்.

மேலும் நேர்முகத் தேர்வு என்றால் அனைவர் மனதிலும் ஒரு பயம் உண்டாகும். அதாவது அதில் என்ன கேள்விகள் கேட்கப்படும், எவ்வாறு பதில் சொல்லுவது, அதற்கு எவ்வாறு தயார் செய்து கொள்வது என பல கேள்விகள் தோன்றும்.

HR கேட்கும் கேள்விகள் அதற்கு எவ்வாறு பதில் சொல்வது என்பதைப் பற்றிய விரிவான விவரங்களைப் இப்பதிவில் இருந்து அறிந்து கொள்ள முடியும். இனி அவற்றைப் பற்றி காண்போம்.

1. உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்

உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரி வேலை தேடுபவரிடம் கேட்கப்படும் முதல் கேள்வி இதுவாக தான் இருக்கும். இதில் உங்களைப் பற்றிய விவரங்களை நீங்கள் எவ்வளவு சுவாரஸ்யத்துடன் சொல்கிறீர்கள் என எதிர்பாக்கப்படும். மேலும், இந்த கேள்வியின் மூலம் உங்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்.

2. இந்த வேலையை தேர்வு செய்ய காரணம் என்ன?

இந்த வேலையை தேர்வு செய்ய காரணம் என்ன

இந்த கேள்வியானது அனைத்து நிறுவனத்திலும் கேட்கப்படும் ஒரு பொதுவான கேள்வியாகும். இந்த கேள்விக்கு நாம் என்ன பதில் சொல்ல போகிறோம் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு மிகவும் அதிகமாக இருக்கும். ஏனெனில் இதன் மூலம் தான் நீங்கள் இந்த தொழில் மீது எவ்வளவு ஆர்வத்துடன் உள்ளீர்கள் என்பதை அவர்கள் அறிய ஒரு வாய்ப்பாக இருக்கும். நீங்கள் கூறும் பதில் அதிகாரியை திருப்தி அடைய வைப்பத்தாக இருக்க வேண்டும்.

3. உங்கள் இலட்சியம் எப்படிப்பட்டது?

உங்கள் இலட்சியம் எப்படிப்பட்டது

பிரஷர்களிடம் அதிகப்படியாக கேட்கப்படும் கேள்விகளில் ஒன்றுதான் உங்கள் இலட்சியம் எப்படிப்பட்டது? ஏனெனில் நீங்கள் தங்களுடைய நிறுவனத்தில் ஒரு இலக்கை அடைய எந்த அளவு ஈடுப்பாட்டுடன் உள்ளீர்கள் என்பதை அறிவார்கள். அதன் மூலம் உங்களது உழைப்பு எப்படி இருக்கும் என தெரிந்து கொள்வார்கள்.

4. மன அழுத்ததை எவ்வாறு சமாளிப்பது?

மன அழுத்ததை எவ்வாறு சமாளிப்பது

பிரஷராக இருக்கும் போது மன அழுத்தம் என்பது அறியப்படாத ஒன்றாக இருக்கும். இதற்கு முன் கல்லூரி வாழ்க்கையில் மன அழுத்தம் என்பது கையாளப்படாத ஒன்று. அதனால் தங்கள் வேலையில் வரும் மன அழுத்தம் எனப்படும் டிப்ரஷனை நீங்கள் எவ்வாறு சமாளித்து வேலையில் ஈடுபாட்டுடன் இருப்பீர்கள் என்று தெரிந்து கொள்வதற்காக இந்த கேள்வி கேட்கப்படும். இதனால் தாங்கள் கூறும் பதில் சற்றும் மாறுபட்டதாக இருக்க வேண்டும்.

5. உங்கள் மாத வருமானம் பற்றிய எதிர்பார்ப்பு என்ன?

உங்கள் மாத வருமானம் பற்றிய எதிர்பார்ப்பு என்ன

உங்கள் நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் முக்கியமான கேள்விகளில் இதும் ஒன்று. இதற்கு பதில் கூறுவது எளிதில் முடியாத ஒன்றாக இருக்கும். மேலும் உங்களின் முதல் வேலை என்பதால் நீங்கள் அனுபவம் மற்றும் அறிவைப் பெறுவதாக இருக்க வேண்டும். அதனால் நிறுவனம் கூறுவதை ஏற்பதாக இருக்க வேண்டும்.

6. உங்களுக்கு என்னிடம் கேட்பதற்கு கேள்விகள் அல்லது சந்தேகம் உள்ளதா?

உங்களுக்கு என்னிடம் கேட்பதற்கு கேள்விகள் அல்லது சந்தேகம் உள்ளதா

உங்களின் நேர்முகத் தேர்வின் போது இறுதியில் கேட்கப்படும் கேள்வி. இதன் மூலம் உங்களது கருத்துகள் மற்றும் சந்தேகத்தை நிறுவனத்தின் அதிகாரிடம் அறிந்து கொள்ள முடியும். நிறுவனத்தைப் பற்றிய கேள்விகளை கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள்.


RECENT GOVERNMENT JOBS:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here