மறுபடியும் கொரோனா வந்துடுச்சா? சொந்த ஊருக்கே தப்பி ஓடும் ஊழியர்கள்..!

What if Corona comes again Employees fleeing to their hometown-Corona Lockdown Details

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ‘கொரோனா’ வைரஸ் என்ற நோய் தொற்று உலகையே அச்சுறுத்தி வந்தது. தற்பொழுது தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்தே காணப்படுகிறது. ‘கொரோனா’ வைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் கண்டறியப்பட்டது. இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் அம்மாநில அரசு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சீனாவில் உள்ள செங்க்சோவ் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுவதால் அந்த பகுதிகளில் பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது. அந்த பகுதியில் மிக பெரிய நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு சாதனங்களை தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஐ-போன் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

செங்க்சோவ் பகுதியில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் சுமார் 3 லட்சம் பேர் பணியாற்றிய நிலையில், பல ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அம்மாநில அரசு பொதுமுடக்கம் பிரபித்துள்ளதால் ஊரடங்குக்கு பயந்து ஊழியர்கள் பலர் ஐ-போன் தொழிற்சாலையில் இருந்து தப்பி ஓடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் இருந்து ஊழியர்கள் தப்பிக்க தொழிற்சாலையின் வேலியில் ஏறி, தாண்டி குதித்து மிகவும் ஆபத்தான முறையில் தப்பி செல்கின்றனர். அங்கு ஊரடங்கு காரணமாக போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் ஊழியர்கள் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது சொந்த ஊர்களுக்கு நடைப்பயணமாக செல்ல தொடங்கி விட்டனர். அவர்கள் வெயிகளிலும், மழைகளிலும் மெதுவாக நடந்து செல்பவர்களுக்கு உள்ளூர் மக்கள் இலவச விநியோக நிலையங்கள் அமைத்து உணவு வழங்குகிறார்கள்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here