ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இதுத் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
சென்ற நாட்களிலெல்லாம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்து கொண்டிருருந்தன. இதற்கு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்ததே காரணம். மேலும் இன்று (வியாழன்) காலை 05.30 மணிநேர வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று புயலாக மாறினது. அதற்கு “மோக்கா புயல்” என பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது.
அதுமட்டுமல்லாது ஏறக்குறைய 510 கி.மீ. தொலைவிற்கு போர்ட் பிளேயருக்கு மேற்கு-தென்மேற்கிலும் மேலும் 1,210 கி.மீ. தொலைவில் காக்ஸ் பஜாரின்(வங்காளதேசம்) தென்-தென்மேற்கேயும் மற்றும் 1120 கி.மீ தொலைவில் சிட்வே(மியான்மர்) க்கு தென்-தென்மேற்கிலும் நிலை கொண்டிருக்கிறது.
தொடர்ந்து இப்புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக தீவிரமடையும் எனவும் மேலும் தீவிர புயலாக இன்று நள்ளிரவின்போது மாற வாய்ப்புள்ளது. இத்தீவிர புயலானது வடக்கு-வடகிழக்கு திசையில் நாளை(1மே 2 ) காலையிலிருந்து படிப்படியாக நகரும். அதைத் தொடர்ந்து மாலையில் அதித்தீவிரப் புயலாக மத்திய வங்கக்கடல் பகுதியில் மேலும் வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இப்படி அதி தீவிர புயலாக காணப்பட்டாலும் தமிழகத்திற்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள செய்தியில் கூறபட்டிருக்கின்றது. தொடர்ந்து சில பகுதிகளில் அதிகமான வெப்பநிலையும் சில இடங்களில் மிதமான மழையும் காணப்படும் என்றும் அதில் கூறப்பட்டு இருக்கிறது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலை வேணுமா? கிளெர்க் வேலை வேணுமா? தமிழ்நாடு அரசு அட்டகாசமான வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது!
- 10வது படித்தவர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் தமிழ்நாடு அரசு வேலை வந்தாச்சு! இன்னைக்கே அப்ளை பண்ணிடுங்க!
- ஆபீஸ் அசிஸ்டன்ட், கிளெர்க், ரிசப்ஷனிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைக்கு தமிழக அரசில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
- பல்வேறு பணியிடங்களை வெளியிட்டுள்ளது பெல் நிறுவனம்! நேர்காணலில் மத்திய அரசு வேலை ரெடி!
- கவர்மெண்ட் வேலை பாக்குற உங்களுக்குத்தான் இந்த மகிழ்ச்சியான செய்தி! சம்பளம் அதிகமா தராங்களாம்!