என்னது பெட்ரோல், டீசல் விலை இவ்வளவா? வேதனையில் மக்கள்…

What is my petrol and diesel price People in agony

பாகிஸ்தான் நாட்டில் ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதால் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியுள்ளதாக கச்சா எண்ணெய் விலை நிர்ணய அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து எண்ணெய் விலை நிர்ணய அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதால்அந்நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெயின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, அந்நாட்டின் மதிப்புப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 272 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று டீசல் விலையும் லிட்டருக்கு 13 ரூபாய் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் டீசல் விலை 293 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து மண்ணெண்ணெயின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மண்ணெண்ணெய் லிட்டருக்கு 2 ரூபாய் 56 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் மண்ணெண்ணெயின் விலை 190 ரூபாய் 29 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பாகிஸ்தான் ரூபாயின் இந்த வரலாறு காணாத வீழ்ச்சியே இந்த விலை ஏற்றத்திற்கு காரணமாகும். இந்த விலை ஏற்றத்தால் மக்கள் வேதனை அடைந்தது வருகின்றனர்.

RECENT POSTS IN JOBSTAMIL.IN