TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு என்றால் என்ன? எக்ஸாம்க்கு தயாராவது எப்படி?

0

TNPSC குரூப்-1 தேர்வு என்பது தமிழ்நாடு தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வாகும். தமிழ்நாட்டு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) என்பது தமிழக அரசுப் பணிக்குத் (Tamilnadu Government Jobs) தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட அரசு சார்ந்த ஓர் அமைப்பாகும். துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் முதலிய பணிகளுக்காக குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. மூன்று கட்டங்களாக இத்தேர்வு நடத்தப்படுகிறது. TNPSC குரூப்-1 தேர்வு பற்றின மேலும் விவரங்களை பார்க்கலாம்.

TNPSC Group 1 Exam Full Details Here

What is TNPSC Group 1 Exam and How to Apply Online for TNPSC Group 1 Exam Full Details Here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2022 2023

TNPSC Group 1 Syllabus | TNPSC Group 1 Exam Date 2022 | TNPSC Group 1 2022 Syllabus | TNPSC Group 1 Posts | TNPSC Group 1 Exam Date 2022 in Tamil | TNPSC Group 1 Syllabus 2022 PDF | TNPSC Group 1 Syllabus Tamil | Group 1 Syllabus in Tamil 2022 | TNPSC Group 1 Books | TNPSC Group 1 Apply Online

1. TNPSC தேர்வு என்றால் என்ன? யாரால் நடத்தப்படுகிறது?

தமிழக அரசின் கீழ் செயல்படும் அனைத்து பணிகளுக்கும் ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். இந்த பணிகளுக்கு தேவையான ஊழியர்களை தேர்ந்தெடுக்க TNPSC தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படுகிறது. இதில் அந்தந்த பதவிகளுக்கு ஏற்ப குரூப் பிரித்து தேர்வு நடத்தப்படுகிறது. TNPSC தேர்வில் மொத்தம் 8 குரூப்களாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படுகிறது.

2. TNPSC Group 1 Posts List – குரூப்-1 தேர்வில் எத்தனை பதவிகள் உள்ளன?

1. துணை கலெக்டர்

2. காவல்துறை துணை கண்காணிப்பாளர்

3. உதவி வணிகவரி ஆணையர்

4. உதவி இயக்குனர் (பஞ்சாயத்து)

5. துணை சரகப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை)

6. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்

7. மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர்

8. மீட்புப் பணித்துறை அலுவலர்

இதுபோன்ற பதவிகளுக்கு குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதலாம்.

3. TNPSC Group 1 Age Limit – எந்த வயதில் குரூப்-1 தேர்வை எழுதலாம்?

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டாயம் 21 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். 35 வயது வரை இருப்பவர்கள் மட்டுமே TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

4. TNPSC Group 1 Qulification – எந்த கல்விதகுதியில் இருப்பவர்கள் குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்?

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் எதாவது ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்களும் அல்லது வரி விதிப்பு சட்டங்களின் கிழ் டிப்ளமோ பட்டம் பெற்றவர்களும் குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வெழுதலாம். மேலும், குரூப்-2 தேர்வுக்கும் இதே கல்வித்தகுதிதான் பின்பற்றப்படுகிறது.

5. TNPSC Group 1 Exam Pattern – மொத்தம் எத்தனை கட்டங்களாக குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது?

குரூப்-1 தேர்வானது மொத்தம் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

i) முதல்நிலைத் தேர்வு:

முதல்நிலை தேர்வுதான் குரூப்-1 தேர்வின் முதல் கட்டமாகும். இந்த முதல்நிலை தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு 3 மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. மொத்தம் 200 கேள்விகளில் 150 கேள்விகளுக்கு சரியான விடையை அளித்தால் மட்டுமே குரூப்-1 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற முடியும்.

ii) முதன்மை தேர்வு:

முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கபடுவார்கள். முதன்மை தேர்வு குரூப்-1 தேர்வின் முக்கிய தேர்வாகும். இந்த தேர்வில் மொத்தம் 750 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இந்த 750 மதிப்பெண்களும் மூன்று தாள்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொறு தாளுக்கும் 250 மதிப்பெண்கள் என 3*250=750 மதிப்பெண்களுக்கு பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும்.

iii) நேர்முகத் தேர்வு:

நேர்முக தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதன்மை தேர்வு மதிப்பெண்களான 750 மற்றும் நேர்முக தேர்வுக்கான 100 மதிபெண்கள் என மொத்தம் 850 மதிபெண்கள் ஆகும். இந்த இரு தேர்வுகளிலும் சேர்த்து பொதுப்பிரிவினர்கள் குறைந்தபட்சம் 340 மதிப்பெண்களும் மற்ற பிரிவினர்கள் குறைந்த பட்சம் 225 மதிபெண்களும் எடுத்திருந்தால் போதும் குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றிடலாம்.

6. TNPSC Group 1 Syllabus – எந்தெந்த பாடத்திட்டத்திலிருந்து குரூப்-1 தேர்வுக்கான கேள்விகள் கேட்கப்படுகிறது?

குரூப்-1 முதல்நிலை தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும். இந்த கேள்விகள் எந்தெந்த பாடத்திட்டத்திலிருந்து எத்தனை மதிப்பெண்களுக்கு கேட்கப்படுகிறது என்பதை இதில் பார்க்கலாம்.

A) முதல்நிலை தேர்வு பாடப்பிரிவுகள்:

1. பொது அறிவியல் பாடத்தில் – 15 கேள்விகள்

2. நடப்பு நிகழ்வுகள் – 15

3. இந்திய புவியியல் -10

4. இந்தியாவின் வரலாறும் பண்பாடும் – 15

5. இந்திய அரசியலமைப்பு – 20

6. இந்திய பொருளாதாரம் – 15

7. இந்திய தேசிய இயக்கம் – 15

8. தமிழ்நாடு வரலாறு – 40

9. தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சம்மோக அரசியல் இயக்கங்கள் – 30

10. திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (புத்திக்கூர்மை) – 25

B) முதன்மை எழுத்து தேர்வுக்கான பாடப்பிரிவுகள்:

இந்த தேர்வில் கட்டாயம் தமிழ் மொழி நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் இதில் மொழிபெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன் மற்றும் சுருக்க கட்டுரையை விரிவாக எழுதுதல், திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல், கடிதம் வரைதல் இதுபோன்ற தமிழ்மொழி சார்ந்த பாடத்திட்டங்கள் இடம் பெற்றிருக்கும்.

மேலும், இந்த தேர்வில் தமிழ் மொழி அறிவு தாள் I, தமிழ் மொழி அறிவு தாள் II மற்றும் III என்ற மூன்று தாள்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய வரலாறு மற்றும் பண்பாடு, தமிநாட்டிலுமுள்ள சமூக பிரச்சனைகள், திறனறிவு மற்றும் அறிவுக்கூர்மைத் தேர்வுகள், இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்தியாவை பாதிக்கக்கூடிய வகையில் உலகம் முழுவதும் தோன்றுகின்ற அரசியல் போக்கு. இந்தியாவின் வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் தாக்கம், தமிழ் சமூகம் – பண்பாடு மற்றும் பாரம்பரியம், தமிழ்நாட்டின் முக்கிய சிறப்பம்சங்களுடன் இந்தியாவின் புவியியல் அமைப்பு சுற்றுச்சூழல், பல்லுயிர் பெருக்கம் மற்றும் பேரிடர் மேலாண்மை, இந்திய பொருளாதாரம் – நடப்பு பொருளாதார போக்குகள் மற்றும் இந்தியாவில் உலக பொருளாதாரத்தின் தாக்கம் ஆகிய தலைப்பில் கேள்விகள் கேட்கப்படும்.

ALSO READ > TNPSC RECRUITMENT 2022 2023 LATEST UPDATES

7. TNPSC Group 1 Preparation Books – குரூப்-1 தேர்வுக்கு எந்தெந்த புத்தகங்கள் படிக்க வேண்டும்?

1. பொது அறிவியல்:

பொது அறிவியல் சம்பந்தமான கேள்விகளுக்கு 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகத்தில் இருக்கும் தலைப்பை நன்கு படித்து நியாபகத்தில் வைத்திருக்க வேண்டும். இதுதவிர மேலும் பொது அறிவு பற்றி தெரிந்து கொள்ள அரிெகெண்ட் ஜென்ரல் நாலேஜ் என்ற ஆங்கில புத்தகத்தை படிக்கலாம்.

2. நடப்பு நிகழ்வுகள்:

தமிழ் மொழியில் வெளியிடப்படும் சிறந்த செய்திதாள்களை தினமும் படித்து அதில் அன்றாட நடக்கும் நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஐஏஎஸ் அகாடமி வெளியிடக்கூடிய டிஎன்பிஎஸ்சி தேர்வு பெட்டகம் மற்றும் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளங்களை பார்வையிடலாம்.

3. இந்திய புவியியல்:

புவியியல் சம்பந்தமான கேள்விகளுக்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள இந்திய புவியியல் பாடப்புத்தகத்தை படிக்க வேண்டும்.

4. இந்தியாவின் வரலாறும் பண்பாடும்:

இந்தியாவின் வரலாற்று கதைகள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் போன்றவை இந்த பாடப்பிரிவில் இடம்பெறும். இந்திய வரலாற்றை தெரிந்துகொள்வதற்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை வரலாறு சம்பந்தமான பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் படிக்க வேண்டும். மேலும், இந்திய வரலாறு மற்றும் பண்பாடு-டாக்டர் சங்கர சரவணன் எழுதிய புத்தகத்தையும் படிக்கலாம்.

5. இந்திய அரசியலமைப்பு:

இந்திய அரசியலமைப்பு பற்றி தெரிந்துகொள்ள, 6-வது முதல் 10 ஆம் வகுப்பு வரை குடிமையியல், 11 மற்றும் 12ஆம் வகுப்பு அரசியல் புத்தகம் பாடத்திட்டத்தில் உள்ள பகுதிகளை மட்டும் படிக்கவும். மேலும் இந்தியன் பொலிட்டிக்கல் லட்சுமிகாந்தன் புத்தகத்தை அல்லது இந்திய அரசியலமைப்பு சந்திரசேகரன் புத்தகத்தையும் படிக்கலாம்.

6. இந்திய பொருளாதாரம்:

இந்திய பொருளாதாரம் பற்றிய கேள்விகளுக்கு, 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பொருளாதார பாடப்பிரிவில் உள்ள அனைத்து பகுதிகளையும் படிக்க வேண்டும். மேலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொருளாதாரம் பாடத்திட்டத்தையும் படிக்கலாம்.

7. இந்தியதேசிய இயக்கம்:

6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள வரலாறு பாடப்புத்தகம் மற்றும் 11, 12-வது வரலாறு புத்தகம் பாடத்திட்டத்தில் உள்ள தலைப்புகளை படிக்கவும். மேலும், ரிஹந்த் ஜெனரல் நாலேஜ் என்ற புத்தகத்தில் உள்ள அறிவியல், அரசியலமைப்பு, பொருளாதாரம், பொது அறிவியல் ஆகியவற்றையும் படிக்கலாம்.

8. திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (புத்தி கூர்மைக்கு):

இதில் கணிதம் சம்பந்தமான கேள்விகள் கேட்கப்படும். இந்த கேள்விகள் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையான பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும். இவ்வளவு கணக்கும் கொஞ்சம் கடினமாக இருப்பின் கடந்த பழைய டிஎன்பிஎஸ்சி வினாத்தாள்களில் உள்ள கணக்குகளை போட்டு பார்க்கவும். கணியன் பூங்குன்றனின் பாகம் 1 மற்றும் பாகம் 2 என்ற கணிதபுத்தகத்தை படிக்கவும்.

8. Can TNPSC Written in Tamil? – தமிழ் மொழியில் குரூப்-1 தேர்வு எழுதலாமா?

குரூப்-1 தேர்வு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் நடைபெறும். வேண்டிய மொழியினை தேர்வு செய்ய இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்பொழுது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். தமிழ்வழியில் தேர்வு செய்தால் கடைசிவரை தமிழ் வழியில் மட்டுமே தேர்வு எழுத முடியும். ஆங்கிலத்தை தேர்வு செய்தால் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு எழுத முடியும்.

9. TNPSC Group 1 Exam Fees Details – குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்பக்கட்டணம் எவ்வளவு?

i) குரூப் 1 தேர்வுக்கான பதிவுக்‌ கட்டணம் – ரூ.150

ii) முதனிலைத்‌ தேர்வு கட்டணம் – ரூ.100

iii) முதன்மை எழுத்துத்‌ தேர்வு கட்டணம் – ரூ.200

இந்த கட்டணங்கள் அனைத்தும் ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த வேண்டும்.

10. TNPSC Group 1 Salary Details – குரூப்-1 தேர்வில் உள்ள பதவிகளுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படும்?

குரூப்-1 தேர்வில் விண்ணப்பிப்பவர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.56,100 முதல் 2,05,700 வரை வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் மாத ஊதியத்தை தவிர பண்டிகை போனஸ், PF, வருடம் தோறும் ஊதிய உயர்வு போன்ற சலுகைகளும் வழங்கப்படும்.

11. TNPSC Group 1 Documents Required – என்னென்ன ஆவணங்களை கொண்டு குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்?

  • 10-வது, 12-வது மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களின் நகல்.
  • ஆதார் அட்டை அல்லது அரசால் வழங்கப்பட்ட ஏதாவது ஒரு ஆவணம்.
  • ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் (அகலம்: 3.5 செ.மீ, உயரம்: 4.5 செ.மீ, 50 KB-க்கு மேல் இருக்க கூடாது).
  • ஊனமுற்றோர்கள் அவர்களின் ஊனமுற்றோர் சான்றிதழ்
  • ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பம் (அகலம்: 6 செ.மீ, உயரம்: 3 செ.மீ, 50 KB க்கு மேல் இருக்க கூடாது).

12. Steps to Apply for TNPSC Group 1 – குரூப்-1 தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது?

  • TNPSC அதிகாரப்பூர்வ இணையதளமான tnpscexams.in என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.
  • அதன்பின் ஒரு முறை பதிவு உள்நுழைவு விவரங்களை பதிவிட்ட பின் உள்நுழையவும்.
  • உள்நுழைந்தவுடன் குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்பப்படிவம் காட்டும். அந்த படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
  • அதன்பின், தேவையான ஆவணங்களை பதிவேற்றி, விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும்.
  • வேண்டுமானால் TNPSC குரூப் 1 விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து கொள்ளாலாம்.

RECENT POSTS:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here