இனி வாட்ஸ் அப்பில் அனுப்பும் புகைப்படங்கள், வீடியோக்களை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும்..! வெளியான சூப்பர் அப்டேட்…

Whats App Update News In Tamil Now you can see the photos and videos sent on WhatsApp only once

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் வருகிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ள செயலிகளில் வாட்ஸ் அப் செயலியும் உள்ளது. அந்த அளவிற்கு பயனாளர்களின் தேவையை கண்டறிந்து அவற்றை பூர்த்தி செய்து வருவதால் நாளுக்கு நாள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ALSO READ : ஓடிடியில் வெளியானது “சித்தா” திரைப்படம்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

அதிலும் குறிப்பாக வாட்ஸ் அப் பயனாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்த ஈமெயில் வெரிஃபிகேஷன் மற்றும் மொபைல் நம்பர் வெரிஃபிகேஷன் உள்ளிட்ட பல்வேறு அப்டேட்டுகளை வெளியிட்டது. அந்த வகையில், தற்பொழுது மீண்டும் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, View Once என்னும் புதிய அம்சத்தை வாட்ஸ் அப் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ரகசிய வீடியோ அல்லது புகைப்படங்களை ஒருவருக்கு அனுப்பும் பட்சத்தில் அதனை அவர்கள் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும்.

மேலும், அனுப்பப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கேலரியில் கூட சேமிக்க முடியாத அளவிற்கு பாதுகாப்பான முறையில் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட்டானது டெஸ்க்டாப் பயனர்களுக்காக மட்டுமே அறிமுகம் செய்துள்ளதகவும், இதனை விண்டோஸ் மற்றும் மேக் பயனர்களும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top