என்னடா இது… மின் கட்டணம் திடீர் உயர்வா?

கோடை காலம் காரணமாக தமிழகத்தில் அண்டை மாநிலமான கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி முதல் மின் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 19 பைசா உயர்த்தப்பட இருப்பதாக மின்சாரத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், ஒரு யூனிட்டு 19 பைசா உயர்வு என்பது 10 பைசா எரிபொருள் கூடுதல் கட்டணமாகவும், மீதி 9 பைசாவானது ஒழுங்குமுறை ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட கட்டணமாகவும் உள்ளது.

What's this... a sudden rise in electricity bills you know

இந்த மின் கட்டணம் உயர்த்த காரணம் கோடை காலத்தில் மக்கள் சிலர் அதிகமாக மின்சாதன பொருள்களை பயன்படுத்த தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மின்சாரத் துறை மின் கட்டணத்தை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இந்த உயர்வால் மின்சார விலை ஒட்டுமொத்தமாக ரூ.6.29 முதல் ரூ.6.48 வரை அதிகரிக்கும் என ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மின்கட்டண உயர்வு மாதத்திற்கு 40 யூனிட்டுகளுக்குக் குறைவான நுகர்வு கொண்ட உள்நாட்டு நுகர்வோருக்கு பொருந்தாது என எரிபொருள் மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN