வாட்ஸ் அப் கொடுக்கப் போகும் சூப்பர் அப்டேட் – பயனர்கள் மகிழ்ச்சி!

0

WhatsApp Updates Call Link: இந்தியாவில் கோடிக்கணக்கான பயனாளர்கள் “வாட்ஸ்அப்” செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் 32 பேர் வரை குரூப் கால் அல்லது வீடியோ கால் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தற்போது இந்த வசதியை சோதனை செய்யத் தொடங்கியுள்ளதாக மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அவர்கள் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

WhatsApp Updates Call Link
WhatsApp Updates Call Link

வாட்ஸ் அப் நிறுவனம் “கால் லிங்க்” (WhatsApp’s Call link) வசதியை தற்போது அறிமுகப் படுத்தபடவுள்ளது. இந்த கால் லிங்க்கின் மூலம் வாட்ஸ்அப்பில் ஆடியோ மற்றும் வீடியோ கால்களை பேச புதிய குரூப் ஆரம்பிக்கவோ அல்லது மற்றவர்களின் குரூப் காலில் இணையவோ முடியும் வகையிலான வசதியை அறிமுகம் செய்யவுள்ளது. ஆனால் இந்த வசதியை வாட்ஸ் அப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

குடும்பங்கள், நண்பர்கள், தொழில்கள் என அனைவருக்கும், அனைத்திற்கும் பயன்படும் எளிதானதாக வாட்ஸ் அப் உள்ளது. வாட்ஸ்அப் செயலியில் கால் செய்வதற்கான பகுதியில் சென்று ‘Create call link’ என்ற லிங்க் உள்ளதா என பார்க்க வேண்டும். இல்லையெனில் கால் இணைப்பைப் பயன்படுத்த வாட்ஸ்அப் பயனர்கள் ‘அப்டேட்’ செய்ய வேண்டும்.” ஒரு இணைப்பு உருவாக்கப்படும் போது உங்கள் தொலைபேசி எண் மற்றவர்களுடன் பகிரப்படும். இரண்டு பேர் (தொலைபேசி எண்கள்) அல்லது அதற்கு மேல் சேர்ந்ததும் அழைப்பு தானாகவே குழு அழைப்பாக மாற்றப்படும்.

RECENT POSTS:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here