TNPSC குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு @ www.tnpsc.gov.in

தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து அரசு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதவற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போட்டி தேர்வுகளை நடத்தி அதன் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டு ஜுலை மாதம் நடைபெற்ற நான்காம் தொகுதி தேர்வின் (TNPSC Group-4) மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு என மொத்தம் 7 ஆயிரத்து 301 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடத்தப்பட்டது. தேர்வுகள் நடைபெற்று 7 மாதங்களுக்கு மேல் ஆகவுள்ள நிலையில் இதுவரை அதற்கான முடிவு வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், குரூப்-4 தேர்வு எழுதிய தேர்வர்கள் தேர்வுகான முடிவுகள் எப்பொழுது வெளியாகும் என்று எதிர்பார்த்து வருகின்றனர். இதுவரை TNPSC இந்த தேர்வுக்கான முடிவுகளை கடந்த அக்டோபர், டிசம்பர், பிப்ரவரி ஆகிய மூன்று மாதங்களில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்பின் எந்த முடிவும் வெளிவரவில்லை.

இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி தற்பொழுது 4-வது முறையாக இதற்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. அதில், இம்மாத (மார்ச்) இறுதிக்குள் குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நேற்று முன்தினம் டுவிட்டரில் குரூப்-4 தேர்வுக்கான முடிவுகளை வெளியிடக்கோரி ஹேஷ்டேக் செய்து வந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், நேற்று டி.என்.பி.எஸ்.சி ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் குறித்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளபடி, இம்மாத (மார்ச் மாத) இறுதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

When is TNPSC Group-4 Exam Results Official notification release www.tnpsc.gov.in read it now

RECENT POSTS IN JOBSTAMIL.IN