கலைஞர் மகளிர் உரிமை ரூ.1000 எப்போது கிடைக்கும்! முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை…!

Today News in Tamilnadu 2023

Today News in Tamilnadu 2023
கலைஞர் மகளிர் உரிமை ரூ.1000 எப்போது கிடைக்கும்! முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை...! 2

தமிழகத்திலே மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 ஆயிரம் கொடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி, 2023-24 நிதியாண்டில் ரூ.7000 கோடி இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டது. இதனால், இந்த திட்டத்தின் மூலம் 1 கோடி குடும்பதலைவிகள் பயனடைவார்கள்.

வருகின்ற 15 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடக்கி வைக்க உள்ளார். இந்த மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு டோக்கன்களையும், விண்ணப்பங்களையும் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யும் பணிகளும் தீவரமாக நடைபெற்றது. இதுவரைக்கும் தமிழகம் முழுவதும் 1.63 கோடி பேர்கள் அப்ளை செய்துள்ளனர்.

Also Read >> புதுசா மின் இணைப்பை பெறனுமா? இனிமே இப்படி தான் பண்ணனும்! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இறுதி ஆலோசனை நடத்த உள்ளார். இதில், மகளிர் உரிமை தொகை திட்டம் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.