தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்த புதிய அறிவிப்பு!!

When will schools open in Tamil Nadu New announcement announced by Minister of School Education Anbil Mahesh this news For you dont miss read it

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் கோடை விடுமுறையின் தேதி தள்ளி வைக்கப்படுகிறாதா? என்ற கேள்வி அனைவரிடமும் இருந்து வந்தது.

இந்நிலையில், இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நிறைவடைந்து வரும் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 1ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் ஐந்தாம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது வெளியின் தாக்கமானது 100 டிகிரியை தாண்டி வருகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசனை செய்யப்பட்டு கூடிய விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN