சென்னையில் வெளுத்து வாங்கும் மழை! ஏரிகள் எல்லாம் நிரம்பியதால் மக்கள் பீதி..!

White rain in Chennai People are panicking because all the lakes are full-Chennai Lakes Details

தமிழகத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதன் காரணமாக ஏரிகள் அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ளது. இதனால் நவம்பர் 2 ஆம் தேதி (இன்று) செம்பரம்பாக்கம் ஏரி மதியம் 3 மணிக்கு திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதுவரை பெய்த கனமழையில் அதிகபட்சமாக திருவொற்றியூரில் 20 செ.மீ மழை பெய்துள்ளது. அடுத்து நுங்கம்பாக்கத்தில் பொறுத்தவரை 11.2 செ.மீ மழையும், மீனம்பாக்கத்தில் 8.2 செ.மீ மழையும், நந்தனத்தில் 8.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

கனமழை காரணமாக நீரின் வரத்து அதுகரித்து வருவதால், முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடியாகும். தற்பொழுது உள்ள நிலவரப்படி இந்த ஏரியின் நீர் இருப்பு 2,692 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது. சென்னை மக்களுக்கு குடிநீர் தேவைக்காக 159 கனஅடி வினாடிக்கு திறந்துவிடப்படுகிறது. தற்பொழுது, புழல் ஏரி, செம்பரம்பாக்கம், செங்குன்றம், பூண்டி உள்ளிட்ட பெரும்பாலான ஏரிகளும் முழு கொள்ளவை நெருங்கியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 3 மணிக்கு நீர் திறக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முதற்கட்டமாக 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here