விதவை பெண்களுக்கு மாசம் ரூ.1,500 தராங்களாம்..! அரசின் அட்டகாசமான அறிவிப்பு! உடனே அப்ளே பண்ணுங்க…

Widows will be given Rs 1500 per month Government announcement Apply now full details here watch it

இந்தியாவில் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், விதவை பெண்களின் குடும்ப நலனுக்காக அவர்களுக்கு வித்வா பென்ஷன் யோஜனா திட்டத்தினை அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள விதவை பெண்களுக்கு அரசு சார்பில் மாதம் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் விதவை பெண்கள், வறுமை கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும் என்றும் அவர்களின் வயதானது 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இதில் விண்ணப்பிக்க சமூக நலத்துறைக்கு சென்று அங்கு படிவம் பெற்று அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்கள் மற்றும் குடும்பத்தின் வருமான சான்றிதழ்களை கொண்டு சமர்பிக்க வேண்டும்.

மேலும், அரசு வழங்கும் இந்த ஓய்வூதியம் வாங்கும் விதவை பெண்களுக்கு குழந்தைகள் இருப்பின் அந்த குழந்தைக்கு 25 வயது ஆகும் வரை இந்த திட்டத்தின் மூலம் அவர்கள் பயன்பெற முடியும். தற்பொழுது இந்த திட்டத்தின் மூலம் விதவை பெண்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியமானது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மாதம் ரூ.1400 ஆக இருந்த ஓய்வூதியமானது தற்பொழுது ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 29,352 விதவை பெண்கள் பயனடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN