தொடர் விடுமுறையால் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பா..? சற்றுமுன் வெளியான் புதிய தகவல்!!

Will 10th, 11th, 12th class general exam be postponed due to continuous vacation

தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 2023-24 ஆம் ஆண்டுக்கான போதுத்தேர்வானது வருகிற மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான அட்டவனையை தமிழக பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, பொதுத்தேற்விற்காக மாணவர்களும் தாயராகி வந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்கப்பட்டது. வெள்ளம் காரணமாக அரையாண்டு தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சமீபத்தில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ALSO READ : குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு முடிவுகள் : சற்றுமுன் TNPSC அறிவித்த புதிய அறிவிப்பு!

வெள்ளம் காரணமாக பள்ளிகளுக்கு விடப்பட்ட தொடர் விடுமுறையால் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுமோ என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதுதொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஏற்கனவே அறிவித்த தேதியில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top