என்னது 50 சதவீத ஊழியர்கள் பணி நீக்கமா? அதிரடி நடவடிக்கை! வேதனையில் ஊழியர்கள்

Will 50 percent of my employees be laid off Action action Employees in agony-Twitter Employees Lays Off

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3.62 லட்சம் கோடிக்கு கையகப்படுத்தினார். டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியான(சிஇஓ) பராக் அகர்வால் மற்றும் பல அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளார்.

இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில், டுவிட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாகக்குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டணம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

மேலும், டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கப்போவதாகவும் அதற்காக நிறுவனத்தின் மேலாளர்களுக்கு பணிநீக்கம் செய்ய வேண்டிய ஊழியர்களின் பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வேதனை அடைந்துள்ளனர். நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த ஊழியர்களில் 50 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் மின்னஞ்சல் முகவரிக்கே பணிநீக்கம் செய்வதற்கான அறிவிப்பு வரும் என்றும் அந்த அறிவிப்பு நவம்பர் 4 ஆம் தேதி(இன்று) காலை 9 மணிக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டுவிட்டரின் அனைத்து அலுவலகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here