தமிழ்நாடு ரேஷன் கடைல இந்த வசதி எல்லாம் வரப்போகுதா? குடும்ப அட்டைதாரர் அனைவரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்!

Will all these facilities come in Tamilnadu ration shop A must-know for all family card holders! just one minits read it now

மக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் மூலம் பெரிதும் பயனடைந்து வருகிறார்கள். அதிலும், ஏழை எளிய மக்கள் மிகவும் பயனடைந்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு அரசும் புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டே தான் இருக்கிறது. புதிய ரேஷன் கார்டுகள், தொலைந்த ரேஷன் கார்டுகள் வீடு தேடி வருகிற வசதிகளை அறிவித்துள்ளனர். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலமாக மொபைல் ரேஷன் கடை திட்டம் மே மாதம் முதல் அமலாக்கப்படவும் உள்ளது. இந்த புதிய அறிவிப்புகள் மூலம் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அந்தவகையில் தற்போது புதிய திட்டத்தினை செயல்படுத்த உள்ளதாக தகவல் வந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளில் விரைவில் Eservice வசதியை அறிமுகம் செய்யப் போவதாக கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் இயங்கி வருகிற 33 ஆயிரத்திற்கும் (33,000) அதிகமான நியாய விலைக் கடைகளில் பாஸ்போர்ட் சேவை, சேவை கட்டணம் செலுத்துவது, ஆதார் திருத்தம் செய்வது உள்ளிட்ட சேவைகளை வழங்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக INDIA POST உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்க முடியும். எண்ணற்ற மக்கள் ரேஷன் கடைகள் மூலம் பல நன்மைகளை பெற முடியும். ஒவ்வொரு திட்டமும் மக்களின் நன்மைக்காகவே தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN