தமிழகத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இன்றைய நிலவரப்படி, அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்ட நிலையில், அம்மாவட்டங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
அவற்றில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு எனவும், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நீலகிரி, கரூரில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
RECENT POSTS
- IIT மெட்ராஸில் சூப்பரான வேலை! மாதம் ரூ.40000 முதல் ரூ.60000 வரை சம்பளம் வழங்கப்படும் @ www.iitm.ac.in
- திருப்பதி செல்லும் பக்தர்களா நீங்க.. இதோ உங்களுக்காக சூப்பர் குட் நியூஸ்..!
- இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை! விண்ணப்பிக்க ரெடியா?
- 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத போறீங்களா.. அப்ப இந்த செய்தி உங்களுக்குத்தான்..! உடனே பாருங்க…
- போச்சுடா..! பெண்கள் பேருல இது இருந்தாலும் மாசம் 1000 ரூபாய் கிடையாதாம்! வெளியான புது தகவல்!