தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல இடங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக நேற்று முன்தினம் சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது அதன்படி சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருச்சி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
RECENT POSTS
- CMRL Recruitment 2023 – Apply Online for GM, Chief Vigilance Officer Jobs | Salary Up to Rs.2,25,000/-PM…
- CMC Vellore Recruitment 2023 – B.sc Can Apply Online For Junior MRL Posts – Apply Now at cmch-vellore.edu…
- KVB Recruitment 2023 Notification Out – Any Graduate Can Apply For Relationship Manager Posts – Apply at kvb.co.in…
- Air India Express Recruitment 2023 – Walk in Interview for Trainee Cabin Crew Vacancy | Apply at irindiaexpress.in/en…
- அருமையான ரயில்வே வேலைகள் அறிவிப்பு! மொத்தம் 50 பணிக்களுக்கு ஆட்கள் தேவை! அதில் நீங்களும் ஒருவராகலாம்!