வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கனுமா? முகவரி மாற்றணுமா? அப்ப உடனே இத பாருங்க..! மாநகராட்சியின் அறிவிப்பு

0
Will name be included in voter list Change address Then watch this immediately Notification of the Corporation-A Special Camp For Voter List

வருடந்தோறும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மாற்றுதல் போன்றவற்றிற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் திருத்தும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கான சிறப்பு முகாம்களில் 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும், புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு – படிவம் 6-யை பூர்த்தி செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரை நீக்க – படிவம் 7-யை பூர்த்தி செய்யவும். வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்து பிழை மற்றும் முகவரி மாற்றம் மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் ஒரே பாகத்தில் இருந்து மற்றொரு பாகத்திற்கு விலாசம் மாற்றி பதிவு செய்ய – படிவம் 8-யை பூர்த்தி செய்யவும்.

இந்த வருடத்திற்கான சிறப்பு முகாம் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக நடந்த சிறப்பு முகாம் கடந்த 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் சுமார் 7 லட்சத்து 10 ஆயிரம் பேர் பயன் அடைந்தனர். இந்நிலையில், வாக்காளர் பட்டயலில் திருத்துவதற்கான சிறப்பு முகாமின் இரண்டாம் கட்டம் சென்னையில் நாளை(சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது.

இந்நிலையில், நாளை மமற்றும் நாளை மறுநாள் நடைபெறும் இந்த சிறப்பு முகாம் சென்னையில் உள்ள 3,723 வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும். மேலும், வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்ல முடியாமல் இருப்பவர்கள் www.nvsp.in என்ற இணைய தளம் மூலமாகவும் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here