முன்னதாக பொழுதுபோக்கு என்றாலே டிவி, விளையாட்டு போன்றவைகள்தான். ஆனால், தற்பொழுது பொழுதுபோக்கு என்றாலே யூடியூப்பில் வீடியோ பார்ப்பது என்ற நிலை மாறியுள்ளது. அந்த அளவிற்கு, கோடிகணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரு சமூக வலைதளமாக யூடியூப் மாறியுள்ளது. இந்த யூடியூப்பில் சமையல் செய்வது முதல் படங்கள் வரை அனைத்தையும் பார்த்து கொள்ளலாம். யூடியூப்பில் இருக்கும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் நமக்கு பிடிக்கும் வீடியோக்களை நாமே தேடி எடுத்து பார்த்து கொள்ளவதுதான்.

இந்நிலையில், நம்மில் பெரும்பாலானோர் சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட பாடலின் வரி தெரியாமலேயே அந்த பாடலின் இசை நம் மனதில் ஓடிகொண்டிருக்கும். ஆனால், எவ்வளவு யோசித்தாலும் அந்த பாடல் வரிகள் நியாபகத்தில் வருவதில்லை. அந்த பாடலை எப்படியாவது கண்டுபிடித்து கேட்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், சமாளிக்க ஏற்கனவே கூகுளில் பாடல்களை ஹம்மிங் செய்வதன் மூலமாக எளிதில் அந்த பாடல் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Also Read : இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சென்று பாராட்டிய பிரதமர் மோடி..!
இதையடுத்து, தற்பொழுது யூடியூப்பிலும் இந்த வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த புதிய அம்சத்தை தற்பொழுது சோதித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் தற்போது சோதனை கட்டத்தில் இருப்பதால் சிறிய குழுவிலான பயனர்களுக்கு மட்டுமே இது பயன்பாட்டிற்கு கிடைக்கிறது. அனைத்து பயனாளர்களும் பயன்படுத்தும் வகையில் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.